முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1982 அன்பரசின் காதல் விமர்சனம்

திங்கட்கிழமை, 29 மே 2023      சினிமா
Anbaras s-Love 2023-05-29

Source: provided

தேவகன்யா தயாரிப்பில் உல்லாஷ் சங்கர் இயக்கத்தில் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 1982 அன்பரசின் காதல். கதை, நாயகன் ஆஷிக் மெர்லின் தனது கல்லூரி தோழி சந்தனாவை காதலிக்கிறார். ஒரு நாள் சந்தனா அரவிந்த் ஒருவரை தேடி காட்டுப்பகுதிக்குள் செல்ல, அவருக்கு உதவியாக ஆஷிக் மெர்லினும் உடன் செல்கிறார். போகும் வழியில் இருவரும் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அவர்களை காப்பாற்றும் உல்லாஷ் சங்கர், தனது இடத்தில் தங்க வைக்கிறார். பின்னர், உல்லாஷ் சங்கரின் நடவடிக்கையால் அங்கிருந்து இருவரும் தப்பிக்க முயற்சிக்க, உல்லாஷ் சங்கர் அவர்களை துறத்துகிறார்.  ஏன் துறத்துகிறார்?, சந்தனா யாரை தேடுகிறார்? ஆஷிக் மெர்லினின காதல் என்னவானது? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை. அன்பரசு பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷிக் மெர்லின் நன்றாக நடித்துள்ளார். சந்தானா அரவிந்த் மற்றும் அருணிமா ராஜ் என இரண்டு நாயகிகளை சுற்றி முழு கதையும் நகர்வதால் இரண்டு பேரும் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் உல்லாஷ் சங்கர், வில்லனுக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். மேலும், எளிமையான கதைகளத்தைக் கொண்டு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே படமாக்கியிருக்கும் இயக்குநர் உல்லாஷ் சங்கருக்குப் பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து