முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் சிறப்பு குழு நாளை ஆலோசனை

திங்கட்கிழமை, 9 மார்ச் 2026      தமிழகம்      அரசியல்
Cong 2024-03-18

சென்னை, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட சிறப்பு குழு நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.

காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அகில இந்திய தலைமை நியமித்துள்ள சிங்தியோ தலைமையிலான 4 பேர் கொண்ட தேர்வு குழுவினர் நாளை (புதன்கிழமை) சென்னை வருகிறார்கள். சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்கள்.

அப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் அந்த தொகுதியில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பற்றி முடிவு செய்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் பெயரை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள். இந்த குழுவினரின் தேர்வு பட்டியலின் அடிப்படையில் எந்தெந்த தொகுதிகள் என்று தி.மு.க.வுடன் பேசி முடிவு செய்ததும் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான 3 நபர்களை தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள். அதன் பிறகு டெல்லி ஒப்புதல் அளித்ததும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து