முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்புவனமம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது மதுரை நீதிமன்றம்

திங்கட்கிழமை, 9 மார்ச் 2026      தமிழகம்

சிவகங்கை, மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் மீது கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவலாளி அஜித்குமாரை அழைத்து வந்து தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தினர். 

மேலும், போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல் மரண வழக்கு பதிவு செய்த சிபிஐ, வழக்கில் சம்பந்தப்பட்ட தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தது.

மேலும், சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் குற்றப் பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளைய ராஜா ஆகிய 4 பேரின் பெயர்கள் சேர்க்கபட்டது. தொடர்ந்து, இந்த வழக்கில் நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவை விசாரிக்க சி.பி.ஐ. தரப்பில் மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜரான நிகிதாவிடம், நகை திருட்டு புகாரை சி.பி.ஐ. முடிக்க முடிவு செய்திருப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. 

அதற்கு நிகிதா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அது தொடர்பாக எழுத்து பூர்வமாக மனு தாக்கல் செய்ய நிகிதாவுக்கு உத்தரவிடபட்டது. இந்த வழக்கு மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகிதா நேரில் ஆஜராகி எழுத்து பூர்வ மனு தாக்கல் செய்தார். திருடு போனதாக கூறப்படும் நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே நகை திருட்டு வழக்கை முடித்து வைக்கிறோம் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு நிகிதா சம்மதம் தெரிவித்ததன் பேரில் நகை திருட்டு புகாரை நீதிமன்றம் முடித்து வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து