முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் பந்தால் கோலியின் ஓவியத்தை தீட்டிய தீவிர ரசிகர்

திங்கட்கிழமை, 29 மே 2023      விளையாட்டு
Virat-Kohli 2023-05-29

Source: provided

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் குவித்து வருகிறார். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மொத்தம் 25,322 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 639 ரன்கள் குவித்துள்ளார். வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளார்.

இந்நிலையில், கோலியின் முகத்தை தத்ரூபமாக டென்னிஸ் பந்தை பயன்படுத்தி கருநிற வண்ணம் கொண்டு வரைந்துள்ளார் ரசிகர் ஒருவர். வெள்ளை நிற சுவரில் டென்னிஸ் பந்தை எறிந்து இந்த ஓவியத்தை அந்த ரசிகர் வரைந்துள்ளார். வரைந்து முடிந்தவுடன் பந்தும், கையுமாக சிரித்த முகத்துடன் அவர் கடந்து செல்கிறார்.

________________

சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து இர்பான் பதான் நெகிழ்ச்சி

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவிருந்த இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டாஸ் வீசப்படுவதற்கான நேரத்துக்கும் முன்பாகவே அகமதாபாதில் இடி மின்னலுடன் பலத்த மழை பொழியத் தொடங்கியது. இதனால் ஆட்டம் நேற்று மாலை 7.30க்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இர்பான் பதான் தனியார் தொலைக்காட்சியில் சென்னை அணியை பற்றி கூறியதாவது:  நீங்கள் சிஎஸ்கே பக்கம் இருந்தால் எல்லோருக்கும் உங்களை பிடிக்கும். தமிழ்நாட்டு மக்கள் உங்கள் மீது அன்பு செலுத்த நேரமெடுக்கும் ஆனால் உங்களை ஒரு முறை நேசிக்க ஆர்ம்பித்துவிட்டால் உங்களை வணங்க ஆரம்பித்துவிடுவர். அவர்கள் தோனியை நேசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். நீங்கள் நிலாவிற்கு சென்றாலும் அங்கு சிஎஸ்கே ரசிகர்கள் இருப்பார்கள். தோனிக்காக சென்னை அணி வெற்றி பெற வேண்டுமென நினைக்கிறேன். 

________________

பிரியாணியில் டோனி ஓவியம் வைரலாகும் புகைப்படம்

புதுவை மாநிலம் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அறிவழகி, ஓவியரான இவர் தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களுடைய உருவத்தை தத்ரூபமாக கோலமாவுகளைக் கொண்டு வரைந்து அசத்தியுள்ளார். காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், டெண்டுல்கர், டோனி ஆகியோரின் உருவங்களையும் ரங்கோலியிலும் வரைந்துள்ளார்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அறிவழகி 2 கிலோ பிரியாணியை கொண்டு 2 அடியில் டோனியின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார். இதில் ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 6 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து