முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சிறுமி படுகொலை: ஷாஹிலை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      இந்தியா
Sahel 2023-05-30

புதுடெல்லி, டெல்லியில் 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஷாஹிலை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் ஜோதி நயின் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 28-ஆம் தேதி இரவு பலரது முன்னிலையில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் ஷாஹில் என்பவரை கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சாஹர் பகுதியிலிருந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஷாஹில் ஏசி இயந்திரம் ரிப்பேர் செய்யும் பணி செய்பவர். இவர் டெல்லி ரோகிணியில் உள்ள ஷாபாத் மதர் டெய்ரி பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2021-ஆம் ஆண்டில் இருந்தே பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், சமீப நாட்களாக சிறுமி ஷாஹிலைவிட்டு விலகியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்திற்கு முதல் நாள் கூட அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். சம்பவத்தன்று சிறுமியை வழிமறித்த ஷாஹில் கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். சிறுமியின் உடலில் 20 கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. இந்தக் கொலை சிசிடிவி கேமராவில் பதிவாக அந்தக் காட்சிகள் வெளியாகி காண்போரை பதறவைத்துள்ளது.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஷாஹில் 15 நாட்களுக்கு முன்னரே கத்தியை வாங்கியதாகவும், காதலை சிறுமி புறக்கணித்ததால் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். கொலையான சிறுமியின் குடும்பத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து