முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 31 மே 2023      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : சேலம் அருகே ஏரியில் குளிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

சேலம் மாவட்டம், முனியப்பன் கோவில் காட்டுவளவு, விருத்தாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரது மகன்பரணிதரன் (வயது 15) மற்றும் கரட்டுப்பட்டி நங்கவள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரது மகன் கிரித்திஷ் (வயது 8) ஆகிய இரண்டு சிறுவர்களும் 30-5-2023 அன்று விருத்தாசம்பட்டி கிராமம், முனியப்பன் கோவில் காட்டூர் ஏரியில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு  அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து