முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மாவின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ஐ.சி.சி.

புதன்கிழமை, 31 மே 2023      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-31

Source: provided

வரும் ஜூன் 7-ம் தேதி இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் படம் இடம்பெற்றுள்ள போஸ்டர் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

“கடந்த 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை விடவும் தற்போது இந்திய அணி சிறப்பாக செயல்படுமா? சிவப்பு பந்து கிரிக்கெட் மீட்சிக்கான நேரம் இது” என்ற கேப்ஷனுடன் ஐசிசி இந்தப் போஸ்டரை பகிர்ந்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ், அக்சர் படேல், ஜெயதேவ் உனத்கட், அஸ்வின், உமேஷ் யாதவ், புஜாரா ஆகியோர் இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

________________

விசாரணை முடியும் வரை காத்திருங்கள்: அனுராக் 

பாலியல் குற்றச்சாட்டில் தில்லி காவல் துறையினரின் விசாரணையை முடிக்கும் வரை பொறுமை காக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அனுராக் தாக்குர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய விளையாட்டுத் துறை அனுராக் தாக்குர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.,  தில்லி காவல்துறையினரின் விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்க மல்யுத்த வீரர்கள்  வேண்டும்.  விளையாட்டு அல்லது விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. 

நாங்கள் அனைவரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்தார். 5 நாள்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஜூன் 5 ஆம் தேதி தில்லி எல்லை முற்றுகையிடப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்த நிலையில், மத்திய அமைச்சர் இவ்வாறுஅனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

________________

டோனிக்கு சாக்‌ஷி வாழ்த்து

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதில், இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட உலக அளவில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் அடங்குவர். இந்தச் சூழலில் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச உள்ளதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில், போராட்டங்களுக்கு மத்தியில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு சாக்‌ஷி மாலிக் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். வாழ்த்துடன் தங்களுக்கான நியாயம் மறுக்கப்படும் செய்தியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில், “வாழ்த்துகள் டோனி ஜி அண்ட் சிஎஸ்கே... குறைந்தபட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காகவது அவர்களுக்கு உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், எங்களைப் பொறுத்தவரை, நீதிக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

________________

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு லக்சயா தகுதி

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென் , தைவான் வீரர் சூ வெய் வாங் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில் பின் தங்கிய லக்சயா சென் அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். 21-23 , 21 -15 , 21 - 15 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்றார்.

இதற்கிடையே சர்வதேச பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி முன்னேற்றம் கண்டுள்ளது. அதன்படி பேட்மிண்டன் தரவரிசையில் 5 வது இடத்தில் இருந்த சாத்விக்-சிராக் ஜோடி ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளனர். இது அவர்களின் சிறந்த தரநிலை என்பது குறிப்பிடத்தக்கது. 

_________________

24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை திடீர் மரணம்

கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத்(24). தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர் கடந்த ஒரு வருடமாக சிக்கமகளூரில் உள்ள கணவர் வீட்டில் தங்கி இருந்தார்.

செவ்வாய்க்கிழமை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். சாலியத் தேசிய கைப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம், சீனியர் தேசிய தென் மண்டலப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் ஜூனியர் தேசிய போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் கர்நாடக மாநில அணியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து