முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 7-ம் தேதிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக் கூடாது: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
Anpil 2023 04 16

சென்னை, தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ம் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால் மாணவ, மாணவிகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கவேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதனைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி  அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- 

கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை வரும் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறோம். முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது. அதை மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வார்கள். 

சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மாவட்ட வாரியாக இது பற்றி விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து