முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையராஜாவுக்கு அமித்ஷா, நடிகர் கமல் பிறந்தநாள் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      சினிமா      இந்தியா
amit-shah 2022-12-01

இம்பால், இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் கமல் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் தனது இசையால் எண்ணற்ற ரசிகர்களை கொண்டவர் இளையாராஜா. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ‘அன்னக்கிளி’-யில் தொடங்கிய அவரது திரை இசைப் பயணம் சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் சென்றுள்ளது. அண்மையில் வெளியான ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடரிலும் அவரது இசை தான். கடந்த 1943-ல் பிறந்த அவர் இன்றும் தேனீ போல சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா:

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாளான நேற்று. அவருக்கு காலை முதலே ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொலைபேசி வழியே இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை: 

ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலமாக, இசையை ஆளும் முடிசூடா மன்னரும், பாராளுமன்ற உறுப்பினருமான இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜா, இன்று பல கோடி மக்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தும் இசை மருத்துவராக, நம் தேசத்தின் அடையாளங்களில் ஒருவராக விளங்குவதில் நம் அனைவருக்கும் பெருமையே.

இசைஞானி இளையராஜாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானி இளையராஜா, நீண்ட ஆயுளுடன் இன்னும் பல ஆண்டுகள் இசையால் இந்த உலகை ஆள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: 

திரையிசை சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களை கடந்து நிலைத்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து