முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோப்பையை பெற்ற தருணம்: டோனியை நினைவுகூர்ந்த ராயுடு

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      விளையாட்டு
Rayudu-Jadeja 2023-06-02

Source: provided

சென்னை : கோப்பையை தான் பெற்ற தருணம் குறித்து டோனியை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார் சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு.

சரியான தருணம்...

அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டம் வென்றது. வெற்றிக் கோப்பையை அணியின் கேப்டன் டோனி மட்டுமல்லது சீனியர் வீரர்களான ராயுடுவும், ஜடேஜாவும் உடன் சென்று பெற்றுக் கொண்டனர். அது குறித்து ராயுடு தெரிவித்தது. “இறுதிப் போட்டியில் வென்ற பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்த என்னையும், ஜடேஜாவையும் டோனி அழைத்து பேசினார். கோப்பையை பெற்றுக் கொள்ளும் போது அவருடன் நானும், ஜடேஜாவும் இருக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார். அதை செய்வதற்கு அதுதான் சரியான தருணம் என்றும் அவர் நினைத்துள்ளார். அது அவருக்கும் ரொம்பவே ஸ்பெஷலான தருணம். ஆனால், அவர் அப்படிச் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. அதுதான் டோனி. அது அவரது இயல்பு” என ராயுடு தெரிவித்துள்ளார்.

அனைத்து போட்டிகளிலும்...

ராயுடு, ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 37 வயதான ராயுடு இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியவர். கடைசியாக கடந்த 2019-ல் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை மொத்தம் 203 போட்டிகளில் விளையாடி உள்ளார். 4,329 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட் செய்துள்ளார். கடந்த 2018 முதல் சென்னை அணிக்காக விளையாடினார். சிஎஸ்கே அணிக்காக 89 ஐபிஎல் போட்டிகளில் 1,913 ரன்கள் குவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 4 days 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 hours ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 hours ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து