முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் அறிமுக போட்டியில் 16 வைடுகள் வீசிய பதிரனா..!

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      விளையாட்டு
Badirana 2023-06-03

Source: provided

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று  முன்தினம் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணியில் அறிமுகமான மதீஷா பதிரனா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதில், 16 வைடுகள் அடங்கும். சென்னை அணியில் இடம் பெற்றிருந்த பதிரனா அசத்தலான பந்து வீச்சால் சென்னை மக்களின் மனதை கவர்ந்தார். டி20-யில் பட்டைய கிளப்பிய பதிரனா, ஒருநாள் போட்டியில் சோதப்பியது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
________________
பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றுக்கு சிட்சிபாஸ், ஷபலென்கா தகுதி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 3-வது சுற்று ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த 26-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபவாலோவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-1 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.அவர் 4-வது சுற்று ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள லாரன்சோ முசட்டியை (இத்தாலி) சந்திக்கிறார்.
5-ம் நிலையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோ ஸ்வார்ட்ஸ் மேனை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 3-வது வரிசையில் உள்ளவருமான ஜோகோவிச் (செர்பியா), செபாஸ்டியன் ஆப்னர் (ஆஸ்திரியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (ரஷியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.
________________
வீராங்கனையின் துப்பாக்கியை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகள்
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இன்று (ஜூன் 3-ந்தேதி) முதல் தொடங்கி நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த போட்டியில், தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான பிரியா திவாரி கலந்து கொள்ள முடிவு செய்து உள்ளார். உத்தர பிரதேசத்தின் லக்னோ நகருக்கு உட்பட்ட பி.ஜி.ஐ. காவல் நிலைய பகுதியில் பிருந்தாவன் காலனியில் அவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் அவரது கைத்துப்பாக்கியை திருடி சென்று உள்ளனர்.
இதுபற்றி அவரது சகோதரர், பிரதீப் குமார் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதில், பிரியாவின் அறை முதல் தளத்தில் உள்ளது. மொத்த குடும்பமும் தரை தளத்தில் கடந்த வியாழ கிழமை இரவில் படுத்து உறங்கியது. இந்நிலையில், திருடர்கள் பால்கனி வழியே முதல் தளத்திற்குள் புகுந்து, பிரியாவின் ஏர் கன் வகை கைத்துப்பாக்கி, லேப்டாப் மற்றும் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பிற பொருட்களை திருடி சென்று உள்ளனர் என புகாரில் தெரிவித்து உள்ளார்.
________________
சச்சினுடன் சுப்மன் கில்லை ஒப்பிடுவதா..? - முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ்டன் கேள்வி
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் அபார திறமை கொண்ட இளம் வீரர் என்றும், அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதில் நியாயமில்லை என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சுப்மன் கில் அபாரமான திறமை கொண்ட ஓர் இளம் வீரர். உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். அவரது பயணத்தின் ஆரம்பத்திலேயே அவரை சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஒப்பிடுவது நியாயமற்றது.
இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் வெற்றிகரமாக ஆடும் திறன் அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்த காலகட்டத்தில், குறிப்பாக டி20 கிரிக்கெட் மிகவும் வேகமாக முன்னேறி வரும்போது, அத்தகைய திறனை நீங்கள் பெரும்பாலும் பார்க்க முடியாது. இந்த ஐபிஎல் சீசனில் அவர் தனது பலத்தையும், அவற்றை ஒவ்வொரு போட்டியிலும் சரியான நேரத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் பற்றிய அற்புதமான புரிதலை வெளிப்படுத்தினார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து