முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்ற வேண்டும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் உரை

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      தமிழகம்
RN-Ravi 2023-06-05

Source: provided

ஊட்டி : நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு தமிழக கவர்னர் ஆர் எம் ரவி தலைமையில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து கவர்னர் பேசியதாவது; தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு முறையான கல்வி அளிப்பது குறித்த மாநாடு நடக்கிறது. நவீன சூழலுக்கு தேவையான கல்வி அளிப்பது தொடர்பான மாநாடு நடந்து வருகிறது. தொழில் புரட்சி ஏற்பட்டபோது வேலை ஆட்களின் தேவை அதிகரித்து காணப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தது. இதனால் கணினி தேவை அதிகரித்தது. இதனால் கணினி கல்வி கற்க அவசியம் ஏற்ப்பட்டுள்ளது. தொலை தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு படையெடுத்தது.

கால மாற்றத்த்துக்கு ஏற்ப கல்வியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு விவசாயம் மற்றும் தொழில் துறைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவர்களை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மெருகேற்ற வேண்டும். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கியது. இன்றைய கால கட்டத்தித்தில் இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாலிடெக்னிக், ஐடிஐ., மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைகிறது.

இதனால் குறைந்த ஊதியத்தில் பொறியியல் மாணவர்கள் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு காலத்துக்கு ஏற்ற கல்வி கிடைக்காததால் அவர்கள் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் கல்வியில் மாற்றம் அவசியம்.

தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோனருக்கு ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. பள்ளி பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். இந்த பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சீனா மற்றும் ஜப்பானில் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். இளைஞர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். தாய் மொழியில் கற்பதை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மாநில அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.

இந்த மாநாட்டில், தமிழ் மொழியில் கிடைக்காத பாடப் புத்தகங்கள், குறிப்பு புத்தகங்கள், ஆய்வு பொருட்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழக  பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல் - கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர்  ஜெகதேஷ் குமார் ஆன்லைன் மூலம் துணைவேந்தர்களிடம் உரையாற்றினார். 

பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் தலைவர்  பேராசிரியர் நாகேஸ்வர ராவ் மற்றும் அனுவாதினி மொழிபெயர்ப்பு  கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றி, துணைவேந்தர்களுடன் கலந்துரையாடினர். இதில், 18 அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 7 தனியார் பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள், 2 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 4 days 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 hours ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 hours ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து