முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சர்ச்சை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெண்கள் இரட்டையர் அணி

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      விளையாட்டு
Tennis 2023-06-05

Source: provided

பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் ஆட்டம் சர்ச்சைக்குரிய வகையில் முடிவடைந்தது, மியு கட்டோ மற்றும் அல்டிலா சுட்ஜியாடி இரட்டையர் அணி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

முதல் செட்டில்...

பாரீசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் -டார்மோ மற்றும் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா ஜோடி ஜப்பானின் கேட்டோ மற்றும் இந்தோனேசியாவின் சுட்ஜியாடி மோதியது. இதில் முதல் செட்டை சாரா சொரிப்ஸ் ஜோடி கைப்பற்றி இருந்தது.

சர்ச்சையாக மாறிய... 

இரண்டாவது செட்டில் ஜப்பானின் கேட்டோ ஜோடி 3-1 என முன்னிலை வகித்தனர். அப்போது  அபோது கேட்டோ அடித்த பந்து  பால் எடுக்கும் பணிப் பெண்ணின் தலையில் பட்டது. இதில் அப்பெண் நிலை குழைந்தார். இது சர்ச்சையாக மாறியது. கேட்டா பந்தை வேண்டுமென்றே பணிப் பெண்ணை அடிக்க நினைத்ததாகத் தெரியவில்லை என்றாலும், பந்து அவர் தலையைத் தாக்கியது. மைதானத்தின் பின்புறம் நின்று பணிப் பெண் கண் கலங்கினார்.

ஜோடி தகுதி நீக்கம்... 

கிராண்ட்ஸ்லாம் மேற்பார்வையாளர் வெய்ன் மெக்கெவன் மற்றும் போட்டி நடுவர் ரெமி அஸெமர் ஆகியோர் மைதானத்திற்குள் வருவதற்கு முன், தலைமை நடுவர் அலெக்ஸாண்ட்ரே ஜூஜ்  இதனை விதி மீறல் என கூறினார். அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இடையேயான விவாதங்களுக்குப் பிறகு, கேட்டோ மற்றும் சுட்ஜியாடி ஜோடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 4 days 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 hours ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 hours ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து