முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலி

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      உலகம்
Afghanistan-bus-accident-2023-06-08

காபூல், வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். 

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். சார்-இ-புல் மாகாணத்தில் தரமற்ற சாலைகள் கொண்ட மலைப் பகுதியில் மினி பஸ் சென்று கொண்டிருந் தபோது பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். இது குறித்து உள்ளூர் காவல்துறைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் தின் முகமது நசாரி கூறுகையில், 

விபத்துக்கு மினிபஸ் ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் அடிக்கடி போக்குவரத்து விபத்துக்கள் நடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து