முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கின:வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டி..?

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      இந்தியா
Priyanka-Gandhi-12023-06-08

Source: provided

திருவனந்தபுரம்: இடைத்தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ள நிலையில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்தார். இவர் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார் என குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மேலும் ராகுல்காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தான் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பு காலியாக இருக்கும் வயநாடு தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கேற்ப வயநாடு தொகுதிக்கான மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அதில் மாதிரி வாக்குபதிவும் நடத்தப்பட்டது. அனைத்து கட்சி பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தலை நடத்த மத்திய தேர்தல் கமிஷன் தயாராகி வருவதை தொடர்ந்து அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ராகுல் காந்தி இங்கு போட்டியிட்ட போது அவருக்காக அவரது சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்ட பின்னர் நடந்த காங்கிரஸ் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

மேலும் அவரும் வயநாடு தொகுதி மக்களை தொடர்ந்து சந்தித்து கட்சிக்காக பிரசாரம் செய்து வந்தார். இதன்காரணமாக இந்த இடைத் தேர்தலில் அவர் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து