முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான்: காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கொடூர தாய்..!

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2025      இந்தியா
Suicide 2023 04 29

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை தாய் ஒருவர் ஏரியில்  வீசி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கான்ஸ்டபிள் கோவிந்த் சர்மா என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு ஆணும், பெண்ணும் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களை நிறுத்தி விசாரித்தார். அந்த பெண், தன்னுடைய குழந்தை காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சோதனை செய்தனர். இதற்கிடையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் பிரியா என்பதும், அவருடன் இருந்த ஆணின் பெயர் அல்கேஷ் என்பதும், இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தனது கணவரை விட்டு பிரிந்து அஜ்மீரில் தனியாக வசித்து வந்துள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த பிரியாவுக்கு, அதே ஓட்டலில் வேலை செய்து வரும் அல்கேஷுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே, போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரியா தனது 3 வயது பெண் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் ஆனா சாகர் ஏரி அருகே நடந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. பின்னர் சுமார் 1.30 மணியளவில் அவர் மட்டும் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கையில் குழந்தை இல்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அடுத்த நாள் காலை குழந்தையின் இறந்த உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பிரியாவிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அவர் குழந்தையை ஏரியில் தூக்கி வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து