முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீ எதிரொலி: நியூயார்க் நகரையே மூழ்கடித்த ஆரஞ்சு நிற புகை மண்டலம்..!

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      உலகம்
Forest-Fire-Canada 2023-06-08

Source: provided

வாஷிங்டன்: கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் தாக்கத்தினால் உருவான நச்சுப் புகைகள்தான் வட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கிய நிலையில் மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர்.

இந்தப் புகையினால் நியூயார்க்கில் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது, அதனால் அன்றைய நாளில் உலகளவிலான காற்றின் தரத்தின் அடிப்படையில் மிக மோசமான நகரங்களில் ஒன்றாக நியூயார்க் அடையாளப்படுத்தப்பட்டது.

இது குறித்து நியூயார்க் வானிலை மையம் கூறும்போது, “வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள், மோசமான காற்றின் தரத்தால் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் வெளியே வருவதை குறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது.

மேலும் நியூயார்க் நகரம் சில நொடிகளில் ஆரஞ்சு நிறமாக மாறிய வீடியோ பதிவையும் நியூயார்க் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து