எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய்: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, இன்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணியில் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இது நூறு சதவீதம் உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.ஜி. கிளப்...
அண்மையில் பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து மெஸ்ஸி வெளியேறினார். அப்போது முதல் அடுத்ததாக அவர் இணைய உள்ள அணி எது என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. மீண்டும் தனது பழைய அணியான பார்சிலோனா அணியுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, பார்சிலோனா அணி தலைவர் ஆகியோர் கிட்டத்தட்ட உறுதி செய்தனர்.
ஒப்பந்தம் செய்ய...
அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணி மற்றும் அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணிகளும் அவர் ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இன்டர் மியாமி அணியை டிக் செய்துள்ளார் மெஸ்ஸி. “நான் இன்டர் மியாமி அணியில் இணைகிறேன். இந்த முடிவு 100 சதவீதம் உறுதி. பணம் தான் முக்கியம் என்றால் நான் சவுதி அரேபியாவின் கிளப்பில் இணைந்திருப்பேன். ஆனால், உண்மை என்னவென்றால் எனது எண்ணம் வேறானதாக உள்ளது. அது பணம் சார்ந்து அல்ல” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இதனை ஸ்பெயின் நாட்டின் பத்திரிகையில் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் நடைபெறும்...
வரும் 2026-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா, மெக்சிக்கோ மற்றும் கனடாவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் 2022 உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸி, அமெரிக்க நாட்டில் கிளப் அணிக்காக விளையாடுவது கால்பந்து விளையாட்டுக்கு புதிய பாய்ச்சலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


