முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க கவர்னர் தலைமையில் அமைதி குழு அமைப்பு: மத்திய அரசு நடவடிக்கை

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      இந்தியா
Central-government 2021 12-

இம்பால், மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க மணிப்பூரில் கவர்னர் தலைமையில் அமைதி குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் ரோந்து சென்றனர். அப்போது அதிரடியாக நடத்திய சோதனையில் கலவரக்காரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என அம்மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, மத்திய அரசு சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவை விசாரணைக்காக மணிப்பூருக்கு அனுப்பி வைத்தது.

விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள் இது குறித்து 6 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிந்து கொள்ள அம்மாநில முதல் மந்திரி பைரன் சிங்கை அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். 

இந்நிலையில், கலவரம் பாதித்த மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த கவர்னர் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இதில் மாநில முதல் மந்திரி, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு சம்பந்தப்பட்ட அமைப்புகள், பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து