எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஹே : நிபா வைரஸ் எதிரொலியால் புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் வரும் 24-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எல்லை பகுதியான புதுச்சேரியில் கட்டுப்பாட்டில் உள்ள மாஹே பிராந்தியத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக பிராந்திய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஹே பிராந்தியத்திற்கு வரும் 24-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மாஹே பிராந்தியத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பிராந்திய நிர்வாக அதிகாரி விடுமுறை அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கோழிக்கோட்டில் வரும் 24-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


