முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு உதவி மையம் இன்று முதல் செயல்படும்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      தமிழகம்
Resan-Stop 2023 07-12

Source: provided

சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு இன்று முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்ப பதிவு உள்ளிட்டவை குறித்து உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம். 

மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று(நேற்று) முதல் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு இன்று முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும் எனவும், ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு தொகை வராமல் இருப்பது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இன்று முதல் உதவி மையம் செயல்படும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பின்பற்றி பொதுமக்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து