முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் அதிநவீன போர் விமானம் மாயமானதால் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      உலகம்
America-1 2023-09-19

வாஷிங்டன், அமெரிக்காவில் நவீனரக போர் விமானம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உலகின் மிகப்பெரிய விமான படையை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இந்த படையில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளது. 80 மில்லியன் டாலர் மதிப்பிலான எப். 35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது. 

திடீரென அந்த விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த போர் விமானம் எங்கே சென்றது என தெரியவில்லை. அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் விமானத்தின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது. அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நவீன ரக போர் விமானம் மாயமான சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து