முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மனைவி மடியில் உயிர்விட விரும்புகிறேன்: நடிகர் சிவக்குமார்

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      சினிமா
Siva-Kumar 2023-09-19

Source: provided

திருப்பூர் : என் மனைவி மடியில் உயிர்விட விரும்புகிறேன் என நடிகர் சிவக்குமார் உருக்கமாக கூறினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள வனாலயத்தில் நடிகர் சிவகுமாரின் திருக்குறள் உரை திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றை 100 திருக்குறள்களோடு பொருத்தி அதை காணொலியாக திரையிடப்பட்டது. 

நடிகர் சிவகுமார் தனது வாழ்வில் சந்தித்த இயக்குனர்கள், நடிகர்கள், நண்பர்கள், தனது குடும்ப உறவுகள் என 100 பேரின் வாழ்க்கையை திருக்குறளோடு ஒப்பிட்டு இந்த காணொலியை வெளியிட்டார். திரையிடலுக்கு முன் பேசிய நடிகர் சிவகுமார், 

பெண்கள் தான் உலகில் படைப்பு கடவுள். எனது தாய் இறந்து விட்டார், ஆனால் எனக்கு இரண்டாவது தாய் எனது மனைவி தான்.  என் மனைவியின் மடியில் என் உயிர் பிரிய விரும்புகிறேன் என உருக்கமாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து