Idhayam Matrimony

பாராளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை நாளை முதல் ஆய்வு செய்கிறார் கே.எஸ்.அழகிரி

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      தமிழகம்
KS-Alagiri 2023 04 09

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை நாளை 21-ம் தேதி முதல் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது. 

தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்தே தொகுதிப் பங்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- 

காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும். இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். வருகிற 21-ம் தேதி திண்டுக்கல், தேனி, அடுத்த மாதம் 1-ம் தேதி திருவள்ளூர், 8-ம் தேதி தென்காசி, விருதுநகர், 14-ம் தேதி கன்னியாகுமரி, 28-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது. 

காலியாக இருக்கும் பூத் கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும். இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. இது பற்றி எங்கள் கட்சி தலைமையும், தி.மு.க. தலைமையும் உரிய நேரத்தில் பேசி முடிவு செய்யும் என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து