முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      தமிழகம்
Income-Tax 1

Source: provided

சென்னை : வரி ஏய்ப்பு புகாரை அடுத்து தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) காலை முதல் சோதனை நடத்தினர்.

வருமான வரி ஏய்ப்பு செய்த புகாரின் அடிப்படையில் 4 தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, எண்ணூர், நாவலூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு, படூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் படூர், சென்னை துரைப்பாக்கத்தில் தனியார் நிறுவனம் என சோதனை நடத்தப்பட்டது. சென்னை மற்றும் புறநகரில்30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 

சென்னை எம்ஜிஆர் நகர் சப்தகிரி காலனியில் உள்ள தனியார் நிறுவனம், சென்னை திநகர் பார்த்தசாரதிபுரம் பகுதியில் உள்ள நிறுவனம் போன்றவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து