Idhayam Matrimony

பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு: இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      உலகம்
Zelensky 2023-09-21

நியூயார்க், பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து இருதரப்பு உறவுகளை பற்றி பேசினார். 

 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது, 

உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபடுகிறது.   ரஷ்யா பல விஷயங்களை ஆயுதங்களாக மாற்றி, தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த விஷயங்கள் எங்களுடைய நாட்டுக்கு எதிராக மட்டுமின்றி, உங்களுக்கும் (ஐ.நா. பொது சபை உறுப்பு நாடுகள்) கூட எதிராக பயன்படுத்தப்படுகிறது என கூறினார். பயங்கரவாதிகள் அணு ஆயுதங்களை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் ரஷ்யாவை சாடினார். 

இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டு அதிபரான லூயிஸ் இனேசியோ லூலா டா சில்வாவை, ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான அமைதியை கட்டியெழுப்புவதற்கான பாதையை வகுப்பதின் முக்கியத்துவம் மற்றும் பேச்சுவார்த்தையை மேம்படுத்துவது ஆகியவை பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். 

இரு நாடுகளின் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து கொள்வது இது முதன்முறை என்று சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

இந்த சந்திப்பை அடுத்து, இருதரப்பு உறவுகள் மற்றும் அமைதி முயற்சிகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பணியாற்றும்படி எங்களுடைய தூதரக குழுவினரை அறிவுறுத்தி உள்ளோம் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து