முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. வில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      உலகம்
UN-member-2023-09-21

நியூயார்க், இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும் என்று இங்கிலாந்து தெரிவித்து உள்ளது. 

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி ஐ.நா.வின் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.   உலகம் நமக்கு முன் வைத்துள்ள சவால்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், நேர்மறையான வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்பும் நம்மிடம் உள்ளது.  நீடித்த வளர்ச்சி இலக்குகளை நாம் மீண்டும் அடைவதற்கான வாய்ப்பும் நமக்கு உள்ளது. 

இதற்கு பொருள் என்னவெனில், நம்முடைய பாரம்பரிய நண்பர்கள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால், உலகில் எழுச்சி பெற்று வரும் சக்தி படைத்த நாடுகளுக்கும் நாம் குரல் கொடுக்க வேண்டும் என கூறினார். 

தொடர்ந்து அவர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என இங்கிலாந்து ஊக்குவித்து வருகிறது. இதன்படி, இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். உலக அரங்கில் ஓர் உயர்ந்த குரலாக இடம்பெற உண்மையில் ஆப்பிரிக்காவும் தகுதி வாய்ந்தது என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து