எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டெல்லி:பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் காரசார விவாதம் நடைபெற்றது.
மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே 33 சதவீத இட ஒதுக்கீடு அமலாகும் என்று தெரிவித்தார். இதையடுத்து மசோதா மீது அனைத்து கட்சி எம்பிக்களும் பேசினர்.
பாராளுமன்ற 5 நாள் சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற கூட்டத்தை அடுத்து மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. கடந்த 18-ம் தேதி பாராளுமன்ற பழைய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி, எம்.பி.க்கள் பிரியா விடை கொடுத்து விட்டு பாராளுமன்ற புதிய கட்டிடத்திற்கு சென்று அவை நடவடிக்கைகளை தொடங்கினர். அப்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 27 பெண் எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 454 எம்.பி.க்கள் ஆதரவாகவும், மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்தனர். நடப்பு சிறப்பு கூட்டத்தொடரில் மக்களவையில் முதலாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதா இதுவாகும்.
புதிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமையையும் இம்மசோதா பெற்றது. மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இங்கும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த அரசியலமைப்பு திருத்த மசோதா மூலம் சட்ட விதிகள் 330, 332 மற்றும் 334- ல் கூடுதலாக ஒரு பிரிவு சேர்க்கப்படும். இதன் மூலம் பாராளுமன்றம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளில் 3-ல் 1 பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த இட ஒதுக்கீடு, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு பெண்களுக்கும் பொருந்தும். இது வரலாற்று சிறப்புமிக்க முயற்சியாகும். மகளிருக்கான இந்த இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு சமவாய்ப்பை ஏற்படுத்தும். இதனை அமல்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அது தொடர்பான வரையறை அவசியமானதாகும் என்றார்.
அதனைத்தொடர்ந்து பா.ஜ. எம்.பி.யும் அந்த கட்சியின் தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க இந்த இட ஒதுக்கீடு மசோதா உறுதியளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட அதிகளவு ஓ.பி.சி பிரிவை சேர்ந்த எம்.பி.க்கள் எங்கள் கட்சியில் உள்ளனர் என்றார்.
தொடர்ந்து மசோதா மீது காரசார விவாதம் நடைபெற்றது. இங்கும் அனைத்து கட்சிகளின் பெண் எம்.பி.க்கள் மசோதா மீது காரசாரமாக பேசினர். விவாதத்துக்கு பின்னர் மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதி பரிசீலனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அவரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா உடனடியாக சட்டமாக மாறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


