முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலில் விழுந்த வானதி சீனிவாசனை செல்லமாக கடிந்து கொண்ட பிரதமர்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      இந்தியா
Modi 2023-09-22

Source: provided

புதுடெல்லி : காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வை பிரதமர் மோடி, காலில் விழக் கூடாது என செல்லமாக கடிந்து கொண்டார். 

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும், அனைத்து கட்சிகள் உறுப்பினர்களுடன் ஏகபோக ஆதரவுடன் நிறைவேறியது.  இதற்கு பிரதமர் மோடியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று காலை டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு மகளிரணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்றார். 

இதை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி சட்டென பின் நகர்ந்தார்.  அத்துடன் நோ... நோ... காலில் விழக்கூடாது என செல்லமாக கடிந்து கொண்டார். 

வானதி சீனிவாசன் பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து