முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      இந்தியா
Modi-1 2023-09-22

Source: provided

புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

மகளிருக்கான இடஒதுக்கீட்டு மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து நேற்று டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க மகளிர் அணி, தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:- 

நாட்டின் அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஆண்டாண்டு காலமாக மகளிர் மசோதாவுக்காக நாடு காத்திருந்தது. 27 ஆண்டு காலம் கிடப்பில் இருந்த மசோதாவை இரண்டே நாளில் நிறைவேற்றினோம். மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம். மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். 

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு பல தடைகள் இருந்தன. ஆனால் இந்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் அதிக ஆதரவு கிடைத்தது ஒரு சாதனை. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

பெண்கள் ஓர் உறுதி எடுத்தால், அதனை உயிரை கொடுத்தாவது நிறைவேற்றுவார்கள். குஜராத்தில் அமுல் நிறுவனம் வளர்ச்சி அடைந்ததற்கு பெண்களின் உழைப்பே காரணம். பாராளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மேம்படுத்துதலில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை நம் நாடு எட்டியுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு சிலர் அரசியல் சாயம் பூச முயற்சி செய்கின்றனர். யாருடைய சுயநலமும் மகளிர் இடஒதுக்கீட்டில் தடைகளை ஏற்படுத்த அனுமதித்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து