Idhayam Matrimony

வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் : கவர்னர் தமிழிசை புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      தமிழகம்
Tamilsai-1

Source: provided

நெல்லை :  நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நெல்லை சென்றிருந்தார். அப்போது விருந்தினர் மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதற்கு நானும் ஒரு காரணம். ரேடியோவை நாம் மறந்திருந்த காலத்தில் மான் கீ பாத் மூலம் அதனை மக்களிடம் எடுத்து சென்றுள்ளார்  பிரதமர் மோடி. அதேபோல் போஸ்ட் ஆபீஸ் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த பிரதமர் அதனை மக்களிடையே எடுத்துச் சென்றுள்ளார். 

அது போல் தான் ரயில் என்றாலே மிக தாமதமாக செல்லும். அதனால் ரயிலில் போக முடியாது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரயிலில் பழமை இருக்கும். ஆனால் புதுமையாக வேகத்தை அதிகரிப்போம் என இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார் பிரதமர் மோடி. 

வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். சனாதனத்தை எதிர்த்து பேசி கொண்டிருக்கிறார்கள். ஆனால் சனாதனம் இங்கு நிரூபித்து கொண்டிருக்கிறது. மக்கள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் எந்த ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலும் ஆயிரக்கணக்கான மக்கள் விநாயகரை வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து