முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் : ஈரோட்டில் ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிப்பு

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      தமிழகம்
EP 2023-09-25

Source: provided

ஈரோடு : மின் நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நேற்று தங்களது உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தை நிறுத்தினர். இதனால் சுமார் ரூ. 500 கோடி அளவிலான வர்த்தகம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து தங்களை மீட்க வலியுறுத்தி ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன. தொழில்துறை மின்சார பயன்பாட்டில் கிலோ வாட்டுக்கான கட்டணம் ரூ. 35-ல் இருந்து ரூ. 154ஆக உயர்த்தப்பட்டது. 

மேலும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்புக் கால கட்டணம் (பீக் அவர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டண சுமையிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மீண்டு வர முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலை கட்டணத்தையும், பீக் அவர்ஸ் கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும். 3பி மின் கட்டண முறையிலிருந்து 3ஏ1 கட்ட ண நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 4-ம் கட்டமாக நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். 

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அதாவது ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், காங்கிரீட் கற்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் நேற்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக சுமார் ரூ. 500 கோடி அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக  அமைப்பின் நிர்வாகிகள் கூறினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து