எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தொடர் விடுமுறை வருவதால் இன்று முதல் 30-ம் தேதி வரை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 1500 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை மிலாடி நபி (வியாழக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும். சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாளோடு அக்டோபர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியும் வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மேலும் நாளை மறுநாள் 29-ம் தேதி ஒருநாள் அரசு ஊழியர்கள் விடுப்பு போட்டால் 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது விடுமுறை விடப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதனால் ரயில்களில் இடங்கள் நிரம்பி விட்டன. தென் மாவட்ட பகுதிகள், கோவை மார்க்கமாக செல்லக் கூடிய ரயில்களில் 5 நாட்களுக்கு எந்த வகுப்பிலும் இடங்கள் இல்லை. அரசு, ஆம்னி பஸ்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது.
இன்று (புதன்கிழமை) பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பி உள்ளன. வெளியூர் பயணம் அதிகரிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இன்று முதல் 30-ம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக தினமும் 500 பஸ்கள் வீதம் 3 நாட்களுக்கு 1500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இன்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைவு பஸ்களில் இன்று 28-ம் தேதி மற்றும் நாளை 29-ம் தேதிகளில் பயணம் செய்ய 40 ஆயிரம் பேர் வரை முன் பதிவு செய்துள்ளனர்.
இதே போல வரும் 2-ம் தேதி (திங்கட்கிழமை) பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் கூடுதலாக 1000 பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கு அரசு விரைவு பஸ்களில் 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்து இருக்கிறார்கள்.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
தொடர் விடுமுறை வருவதால் பொதுமக்கள் பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் அதற்கேற்றவாறு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகங்கள் மூலம் தேவையான பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
மேலும் நாளை 28-ம் தேதி பவுர்ணமி சிறப்பு தினமும் வருகிறது. அதனால் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. 29-ம் தேதி வரை முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


