Idhayam Matrimony

உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      உலகம்
Uzbekistan-Bomb-blast-2023-

தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் விமான நிலையம் உள்ளது. இதன் அருகே உள்ள சுங்க கிடங்கில் நள்ளிரவு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். 

இந்த குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது. 

இதில் காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து