எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹாங்சோ:ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் குழுவாக இணைந்து இந்தப் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் குழுவினர் இணைந்து 1734 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றுள்ளனர். 1733 புள்ளிகளுடன் சீனா இரண்டாவது இடமும், 1730 புள்ளிகளுடன் வியட்நாம் மூன்றாவது இடமும் இந்தப் பிரிவில் பெற்றிருந்தன.
துப்பாக்கி சுடுதலில் நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வென்றுள்ள நான்காவது தங்கம் இது. முன்னதாக, ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு, மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் குழு, மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் என துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. 6 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்களம் என மொத்தம் 24 பதக்கங்களை (செப். 28 - காலை 08:30 நிலவரப்படி) வென்றுள்ள இந்தியா பதக்கப்பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.
80 தங்கம், 44 வெள்ளி, 21 வெண்களம் வென்று 145 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 19 தங்கம், 18 வெள்ளி, 33 வெண்களம் வென்று 70 பதக்கங்களுடன் தென் கொரியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 15 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்களம் வென்று 66 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடத்தில் உள்ளது. 6 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்களம் வென்று 28 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் நான்கம் இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


