முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி குறித்து: முதல்வர் தாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      இந்தியா
Modi 2023-11-21

உத்தரகாசி, உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார்.

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. 

அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கி ஒன்பது நாட்களாக தவித்து வருகின்றனர். அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகளின் பேரிடா் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி சுரங்கப் பாதையினுள் சிக்கி ஒன்பது நாட்களாக தவித்து வரும் 41 தொழிலாளர்களை மீட்பது குறித்தும், செங்குத்தாக துளையிடும் பணிகளின் நிலை பற்றியும் கேட்டறிந்தார். 

இது குறித்து உத்தரகண்ட் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள். மேலும், 41 தொழிலாளர்களின் மன உறுதியைப் பேண வேண்டியது மிக அவசியம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசியப் பொருட்களை உள்ளே அனுப்புவதற்காக செங்குத்தாக துளையிடும் பணிகளை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் தொடங்க உள்ளது. முன்னதாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் செயலர் அனுராக் ஜெயின் 41 தொழிலாளர்களை மீட்பதற்கான ஐந்து அம்ச செயல்திட்டத்தை நேற்று முன்தினம் அறிவித்தார். கடந்த 12-ம் தேதி அதிகாலையில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க 8 நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து