முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. உலகக்கோப்பை கனவு அணி: கேப்டன் ரோகித் சர்மா உள்பட 6 இந்திய வீரர்களுக்கு இடம்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

துபாய் : ஐ.சி.சி. உலகக்கோப்பை கனவு அணியில் கேப்டன் ரோகித் சர்மா உள்பட 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

6-வது முறையாக... 

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த மாதம் 5ஆம்தேதி தொடங்கி 7 வார காலங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

ஏராளமான சாதனைகள்...

இந்த தொடரில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக 'டைம்டு அவுட்' முறையில் அவுட் வழங்கப்பட்ட நிகழ்வும் இதில்தான் அரங்கேறியது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலகக்கோப்பைக்கான கனவு அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதற்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அதில் ரோகித், விராட் கோலி உட்பட 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து அணிகளில் இருந்து எந்த ஒரு வீரரும் கனவு அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை தொடருக்கான கனவு அணி;

1. ரோகித் சர்மா (கேப்டன்) (இந்தியா).

2. விராட் கோலி  (இந்தியா).

3. கேஎல் ராகுல் (இந்தியா).

4. ரவீந்திர ஜடேஜா (இந்தியா).

5. முகமது ஷமி ( இந்தியா).

6. பும்ரா ( இந்தியா ).

7. டி காக் ( தென் ஆப்பிரிக்கா).

8. டேரில் மிட்செல் ( நியூசிலாந்து).

9. கிளென் மேக்ஸ்வெல் ( ஆஸ்திரேலியா).

10. தில்ஷன் மதுஷன்கா (இலங்கை).

11.ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா).

12. ஜெரால்ட் கோட்ஸி (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து