முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க்கில் கோலாகலமாக தொடங்கிய எம்மி விருது விழா: இந்திய நடிகர் வீர் தாஸ், இயக்குநர் எக்தா கபூருக்கு விருது

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2023      சினிமா      உலகம்
New-York 2023-11-22

நியூயார்க், பிரபல இசையமைப்பாளரும், காமெடி நடிகருமான வீர் தாஸ் நடப்பாண்டின் சிறந்த காமெடி நடிகருக்கான எம்மி விருதை பெற்று அசத்தியுள்ளார். 

51-வது சர்வதேச எம்மி விருது விழா நியூயார்க்கில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு வழங்கப்படும் இந்த விருதுக்காக 20 நாடுகளை சேர்ந்த 56 கலைஞர்களின் பெயர்கள் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றுள் சிறந்த இயக்குநருக்கான விருது பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான எக்தா கபூருக்கு வழங்கப்பட்டது. சிறந்த காமெடி நடிகருக்கான எம்மி விருதை வீர் தாஸ் லாண்டிங் என்ற வெப் தொடருக்காக வீர் தாஸுக்கு கிடைத்திருக்கிறது. 

நகைசுவை பிரிவில் இந்தியாவிற்கு அவர் முதல் எம்மி விருதை பெற்று தந்திருக்கிறார். ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு நடந்த விருது வழங்கும் விழாவில் இதே பிரிவில் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

டெல்லி கிரைம் 2 தொடருக்கு சிறந்த நடிகைக்கான விருது செபாலிஷாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த விருதை மெக்சிகோ நடிகை கர்லா சமுசா தட்டி சென்றார். சிறந்த நடிகருக்கான விருதை தி ரெஸ்பாண்டெட் படத்தில் நடித்த மார்ட்டின் பிரிமேன் பெற்றிருக்கிறார். 

சிறந்த விளையாட்டுக்கான ஆவண பட விருது ஆர்லியன் கேப்டியா படத்திற்கு கிடைத்துள்ளது. ஜெர்மன் தயாரிப்பான தி எம்ப்ரஸ் சிறந்த ட்ராமா சீரிஸ் விருதை வென்றது. இந்நிலையில் இந்தியாவிற்கு 2 எம்மி விருதை பெற்று தந்த வீர் தாஸ் மற்றும் எக்தா கபூர் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து