முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன்: ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2023      இந்தியா      அரசியல்
Rajasthan 2023-11-22

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டார். அதில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன் 

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் ஒரு தொகுதியின் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 

தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவுக்கு வருவதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. ராஜஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. சமீபத்தில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 

இந்நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதற்கான விழா ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். 

அதில், விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். சுவாமிநாதன் அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.  காங்கிரஸ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற்படுத்தப்படும். 

பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதனை 2030-க்குள் 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு என்பது  உள்ளிட்ட  பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள. 

அப்போது அவர் பேசுகையில், 

காங்கிரஸ் கட்சியை பழிப்பதைத் தவிர வேறு எந்த வேலையையும் பிரதமர் மோடி செய்வதில்லை. என்னை, ராகுல் காந்தியை, சமீபத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து பழிக்கிறார். 

நான் அவரது தந்தையை மரியாதைக் குறைவாக பேசிவிட்டதாக மோடி கூறுகிறார். நான் ஏன் அவரை மரியாதைக் குறைவாகப் பேசப் போகிறேன். அவர் எப்போதே இறந்து விட்டவர். இறந்தவர்களை அவமதிக்கும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. ஆனால், அந்த பழக்கம் மோடிக்கு இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலம். ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது இது முதல்முறை அல்ல. 1926-ம் ஆண்டு முதலே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 

அப்போது முதலே, எத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ அதைத்தான் நாங்கள் கூறுவோம். கடந்த 2018-ல் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கு அதிகமாக அசோக் கெலாட் நிறைவேற்றி விட்டார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது இங்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ராஜஸ்தானில் மட்டுமல்ல, நாடு முழுமைக்குமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டும் எனும் நோக்கத்திலேயே சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து