முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2023      சினிமா      தமிழகம்
CM-2 2023-11-22

சென்னை, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை கவின் கலைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வேந்தரான முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். 

தமிழக முதல்வரும், பல்கலைக் கழக வேந்தருமான மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவில், மதிப்புறு முனைவர் பட்டத்தை திரையிசை பின்னணிப் பாடகி பி. சுசீலாவிற்கு வழங்கினார்.

இவ்விழாவில்,  செய்தித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான மு.பெ. சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன்,  துணை வேந்தர் முனைவர் சௌமியா, பதிவாளர் சிவசௌந்தரவள்ளி, கர்நாடக இசைக் கலைஞரும், சமூக செயற்பாட்டாளருமான டி.எம். கிருஷ்ணா, பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பன்மொழிகளில் ஏறக்குறைய 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியவர் பி.சுசீலா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு ஏற்கனவே பத்மபூஷண் விருது, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து