Idhayam Matrimony

பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து நாளை 29-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பழைய 6 அணைக்கட்டு கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 29.11.2023 முதல் 28.03.2024 முடிய 120 நாட்களுக்கு மொத்தம் 1225.67 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், அ.கலையம்புத்தூர், மானூர், கோரிக்கடவு, கீரனூர் மற்றும் கோட்டத்துறை ஆகிய கிராமங்களிலுள்ள மொத்தம் 6168 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து