முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      தமிழகம்
Chembarambakkam 2023 06 20

சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதால் 200 கனஅடி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.  அதன்படி, நேற்று காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே வினாடிக்கு 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 175 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்துக்கேற்ப ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 59 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து