முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி 20 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      இந்தியா
Kerala-2023-11-28

திருவனந்தபுரம், கேரளாவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் 20 மணி நேரத்துக்கு பிறகு மீட்டுள்ளனர். 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஒயூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹல் சாரா ரிஜி. இந்த சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் தனது சகோதரனுடன் வீட்டில் இருந்து டியூசன் வகுப்புக்கு நடந்து சென்ற போது, இருவரையும் பின்தொடர்ந்து சென்ற கும்பல் சிறுமி சாராவை காரில் கடத்தி சென்றது.  

பின்னர், சிறுமியின் தாயாருக்கு போன் செய்த அந்த கும்பல், சிறுமியை விடுவிக்க ரூ. 5 லட்சம் கொடுக்கும்படி கூறியுள்ளது. மேலும், போலீசாருக்கு தகவல் கொடுத்தால் விபரீதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பின்னர், மீண்டும் போன் செய்து, ரூ.10 லட்சம் தரும்படி மிரட்டியுள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமரா பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போலீசார், சிறுமி மருதனப்பள்ளி பகுதியில் வெள்ளை நிற காரில் கடத்தப்பட்டதை கண்டுபிடித்தனர். 

தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 20 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். நேற்று மதியம் கொல்லத்தில் உள்ள பொது மைதானத்தில் சிறுமி தனியாக அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

போலீசார் விரைந்து சென்று, தனியாக இருந்த சிறுமியை மீட்டனர். கடத்தல்காரர்கள், சிறுமியை அந்த இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து