எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், தெற்கு ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 8 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் நேற்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது.
விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்துள்ளார்.
தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல் படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்.
ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


