முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைக்கம் போராட்டம் பற்றி பழ.அதியமான் எழுதிய நூலின் கன்னட மொழிபெயர்ப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      தமிழகம்
CM-3 2023-11-29

Source: provided

சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், எழுத்தாளர் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலினை வெளியிட, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். 

வைக்கம் போராட்டம் தொடங்கி நூறாண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, தமிழக  அரசின் சார்பில் 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் நாள் தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், போராட்டத்தின் வரலாற்றையும், வெற்றியையும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 30.3.2023 அன்று விதி 110-ன் கீழ் 11 அறிவிப்புகளை முதல்வர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த  ஏப்ரல் 1-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில்  எழுத்தாளர் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் மலையாள மொழிப்பெயர்ப்பு வெளியிடப்பட்டது. 

அந்த வகையில் நேற்று நவம்பர் 29-ம் நாள், 1925-ம் ஆண்டு வைக்கம் போராட்டத்தின் வெற்றிவிழா வைக்கத்தில் கொண்டாடப்பட்ட நாளாகும். அந்த விழாவிற்கு தந்தை பெரியார் தலைமையேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நாளினை நினைவு கூரும் வகையில் நேற்று எழுத்தாளர் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை முதல்வர் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார். பேராசிரியர் ஸ்ரீதரா மேற்பார்வையில் செல்வகுமார் இந்நூலினை  மொழி பெயர்த்துள்ளார்.  கௌரி மீடியா டிரஸ்ட் நிறுவனத்தோடு இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து