முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு 2 புதிய வால்வோ பேருந்துகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      தமிழகம்
CM-4 2023-11-29

Source: provided

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் 60 மாற்றுத்திறனாளி  மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அச்சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.

2023–24ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில், திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்ய இரண்டு குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்பிற்கிணங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, பூவிருந்தவல்லி - பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் சானிடோரியம்- செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தாம்பரம் சானிடோரியம் அறிவுசார் குறையுடையோருக்கான அரசு நிறுவனம் ஆகிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகளை தமிழ்நாட்டின் தலைச்சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றான  மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அச்சொகுசு சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் கீதா ஜீவன்,  ராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், முதன்மைச் செயலாளர் / சுற்றுலா ஆணையர் மற்றும் தலைவர்/ தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கமல் கிஷோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய  புன்னகைகள் பூக்கின்றன. மாற்றுத் திறனாளி மாணவர்களை திரையரங்கம், மெட்ரோ ரயில் பயணம், விமானப் பயணம் அழைத்துச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம்  அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றேன். இந்தப் பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து