முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவுத்திடல் அருகே தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : சென்னை தீவுத்திடல் அருகே தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில், தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சாலைகளில் இரவுப் போட்டியாக பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து மருத்துவர் ஸ்ரீஹரீஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஃபார்முலா  கார் பந்தயம் தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து அனைத்து விவரங்களையும் டிசம்பர் 4ஆம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது, கார் பந்தயம் நடத்தவிருக்கும் தனியார் நிறுவனம் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களில், கார் பந்தயம் நடத்தும் இடத்தில், தடுப்பாண்கள், கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பந்தய வீரர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா பந்தய தடம் அமைக்கும் பணிகளுக்காக ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை என்று தமிழக அரசு வாதத்தை முன் வைத்தது. ஃபார்முலா கார் பந்தயத்தால், அப்பகுதியில் ராணுவம், கடற்படை, துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்காக, தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழக அரசுக்கு ஏதேனும் வருவாய் கிடைக்குமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பந்தயத்தை நடத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், ஏற்கனவே ஐதராபாத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் பந்தயத்தை நடத்தியுள்ளதாகவும் நிறுவனங்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிமன்றம், கார் பந்தய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து