முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன நாயகன் திரைப்படம் வெளியாகுமா? விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்

செவ்வாய்க்கிழமை, 6 ஜனவரி 2026      சினிமா
vijay 2025-10-09

சென்னை, நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஜன நாயகன் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தணிக்கைச் சான்று கிடைப்பதில் தொடர் தாமதம் நிலவுகிறது. நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில், உடனடியாக தணிக்கைச் சான்றிதழை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று காலை அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, ”ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கேட்டு மறு ஆய்வுக்காக தணிக்கை வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக தெரிவித்து சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது” என்று படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இதையடுத்து, மத உணர்வைப் புண்படுத்தும் காட்சிகள் தொடர்பான புகாரைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர். இதன்காரணமாக இன்னும் ஜன நாயகன் படத்துக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து