முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞரின் மரியாதையை பெற்றவர்: ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் நடிகர் ரஜினி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      சினிமா
AVM-CM-2026-01-04

சென்னை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞரின் மரியாதையை பெற்றவர் என்று ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் ரஜினி பேசியதாவது:- ஏ.வி.எம். நிறுவனத்தில் நான் 11 படம் நடித்து இருக்கிறேன். அதில் 9 படங்கள் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படங்கள் ஆகும். ஒவ்வொரு படத்திலும் கதையை நாம் கேட்கவே வேண்டாம்.

எந்த நடிகருக்கு எந்த மாதிரி படம் பண்ணனும், அவரது ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள். அது வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் ஆய்வு செய்து திரைக்கதை செய்து வைத்து விட்டு, நடிகர்களுக்கு அந்தந்த கதாபாத்திரத்துக்கு என்னென்ன பண்ணனும் என்பதை செய்து, இசை, படத்தொகுப்பு எல்லாவற்றிலும் அவரது கை இருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாது.

மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்தில் உட்கார்ந்து எப்படி ஜெயித்தாரோ, அந்த மாதிரி அவர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே எல்லா படத்தையும் ஜெயிக்க வைத்தார். எல்லா படத்தையும் வெற்றிப்படமாக்கினார். சினிமா மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஏ.வி.எம்.சரவணன் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். 

சினிமா உலகத்துக்கு வெளியேயும் ஏ.வி.எம். சரவணனுக்கு மரியாதை இருந்தது. ஏனென்றால் அவர் அப்படி வாழ்ந்தார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. இருந்தாலும் எம்.ஜி.ஆர். அவரை ஷெரீப் ஆக்கி அழகு பார்த்தார். ஜெயலலிதா அவர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார். கலைஞரும் அவர் மீது நிறைய மரியாதை வைத்திருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார். தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது. அந்த மாதிரி இருந்தும் அதை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறார். இங்கு வந்திருப்பதால் அவருக்கு 100 ஓட்டுகள் அதிகமாக கிடைத்து விடாது. ஆனாலும் கூட அவர் இங்கு வந்திருப்பது ஏ.வி. எம்.சரவணன் எந்த மாதிரி வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன மாதிரி ஒரு அன்பும், பண்பும் கொண்டவர், உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதற்கு எடுத்துக்காட்டு.

அசையாத சொத்துக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். நம் வாழ்க்கையில் நம்மை விரும்புகிறவர்கள், நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் ஒரு சில பேர்தான் இருப்பார்கள். அவர்கள் அசையாத சொத்துக்கள். எனக்கு அசையாத சொத்துக்களாக கே.பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாசலம், ஆர்.எம்.வீரப்பன், சரவணன், கலைஞர் ஆகியோர் இருந்தனர். காலத்தின் சட்டமோ என்னவோ, நாம் யார் மீது பிரியமாக இருக்கிறோமோ அவர்களை காலம் சீக்கிரமே கொண்டு சென்று விடுகிறது. ஒவ்வொருவரும் பிரியும் போது நமக்கு எவ்வளவு பணம், பேர், புகழ், குடும்பம் இருந்தாலும், அனாதையாக உணர்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து