முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 6 ஜனவரி 2026      தமிழகம்
Sivashankar 2023-05-08

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை தலைமையகத்தில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் 12,552, சிறப்பு பேருந்துகள் 21,535 என மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கும் வாகன ஓட்டிகள் ஈசிஆர், ஓஎம் ஆர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 11.35 லட்சம் பேர் சொந்ஹ ஊர் செல்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பண்டிகை முடிந்து சென்னை திரும்ப தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 6,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் சேர்ந்து மொத்தம் 21,635 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜன.9-ல் 1,050 பேருந்துகள், 10-ல் 1,030 பேருந்துகள், 11-ல் 255 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.ஜன 12-ல் 2,200 பேருந்துகள், ஜன.13-ல் 2,790 பேருந்துகள், ஜன.14-ல் 2,920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி ஜன9 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து